தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்: நடிகை நமீதா வெளியிட்ட பகீர் தகவல்

heroine depressed worst
By Jon Jan 29, 2021 11:45 AM GMT
Report

நடிகை நமீதா 10 ஆண்டுகளுக்கு முன்பு மன அழுத்தத்தில் இருந்தது பற்றியும், உடல் எடை குறைத்தது பற்றியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல திரைப்பட நடிகையான நமீதா, கவர்ச்சி மூலம், தமிழ் திரையுலகில் பிரபல்மானார். அதன் பின் தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

அதன் பின் தன் காதலரை திருமணம் செய்து கொண்டு, அரசியல் ஒரு பக்கம், சினிமா ஒரு பக்கம் என்று இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,10 வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தையும், தற்போது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.


அதில், முன்பும், பின்பும். இடது பக்கம் இருக்கும் போட்டோ 9 அல்லது 10 வருடத்திற்க்கு முன் எடுத்தது. வலது பக்கம் இருப்பது தற்போது எடுத்தது. எந்த வித மேக்கப் அல்லது பில்டர் போடாமல் எடுத்தது. இதை தற்போது பதிவேற்றம் செய்வதற்கு காரணம் மனஅழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தான்.

முதல் புகைப்படத்தில் நான் அதிக மனஅழுத்தத்துடன் இருக்கிறேன். அது எனக்கே தெரியாது. நான் யாருடனும் பழக மாட்டேன், மிகவும் சங்கடமான நிலையில் தான் இருந்தேன். என்னால் இரவில் தூங்க முடியாது. நான் அதிகம் உணவின் மீது சார்ந்து இருக்க ஆரம்பித்தேன். தினமும் பீசா ஆர்டர் செய்ய தொடங்கினேன்.

திடீரென நான் குண்டாகி விட்டேன். நான் அதிக எடையுடன் 97 கிலோ இருந்தேன். நான் போதைக்கு அடிமையாகி விட்டேன் என்று கூட சிலர் பேசினார்கள். ஆனால் எனக்கு PCOD மற்றும் தைரொய்ட் பிரச்சனை இருக்கிறது என்பது எனக்கு மட்டும் தெரியும். எனக்கு தற்கொலை எண்ணம் கூட வந்தது, யாராலும் எனக்கு அமைதி தர முடியவில்லை.

ஐந்தரை வருட மன அழுத்தத்திற்கு பிறகு நான் தியானம் மூலமாக அமைதியை கண்டேன். நான் எந்த டாக்டரையும் பார்க்கவில்லை எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. நான் செய்யும் தியானம் மற்றும் கிருஷ்ணருக்காக நான் செலவிட்ட நேரம் தான் எனக்கு சிகிச்சை. நான் இறுதியில் அமைதியை கண்டேன். நீங்கள் வெளியில் தேடும் ஒன்று உங்களுக்கு உள்ளே தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.