நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நடிகை ரக்ஷிதா திடீர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து நடிகை ரக்சிதா விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல விஜய் டிவியில் கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ரியலில் மஹா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரக்ஷிதா.
இந்த சீரியல் குழுவினருடன் இடையில் ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் காரணமாக அவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சமீபத்தில் சில தகவல்கள் வெளியானது. இதற்கு மத்தியில் தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வந்த நடிகை ரக்ஷிதா தற்போது தனது விலகல் குறித்த சில பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
ஆனால் நடிகை ரக்ஷிதா ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில், விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி, ‘காற்றுக்கென்ன வேலி’ நடிகர் தர்ஷன் ஆகியோர் சீரியல்களை விட்டு விலகி இருக்கும் நிலையில் தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை ரக்ஷிதாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.