மீண்டும் வரலாறு படைத்த நமீபியா அணி - ஸ்காட்லாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் அபுதாபியில் இன்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மெக்ஹெல்ட் மற்றும் கேப்டன் பிரிங்டனும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். இதனால் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து ஸ்காட்லாந்து தடுமாறியது.
அடுத்து களம் கண்ட லிசிக் 44 ரன்கள் குவிக்க ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய நமீபியா வீரர் ரூபன் டிரம்பல்மென் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி ஜே.ஜே.ஸ்மித் 32, தொடக்க ஆட்டக்காரர் கிரெய்க் வில்லியம்ஸ் 23 எடுக்க 19.1 ஓவர்களில் நமீபியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல்முறையாக சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த நமீபியா அணி தனது முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

Puzzle IQ Test: படத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்-12 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
