வரலாற்றில் இதுவே முதல் முறை...டி20 உலகக்கோப்பையில் சாதனைப் படைத்த நமீபியா அணி
டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று மற்றும் பயிற்சி ஆட்டங்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சார்ஜாவில் இன்று நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியா-அயர்லாந்து அணிகள் மோதின.
உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு இதுவரை 3 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் 4வதாக தகுதி பெறவுள்ள அணி எது என்பதை இன்றைய ஆட்டம் தீர்மானிக்கும் என்பதால் இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியில் பால் ஸ்டிர்லிங் 38, கெவின் ஓபிரையன் 25, கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி 21 ரன்கள் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. நமீபியா அணியில் ஜான் பிரைலிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் விளாசினார். இதனால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து நமீபியா அணி 126 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 12 சுற்றுக்கு நமீபியா அணி முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil
