இப்படி ஒரு பெயரா; நயன்தாரா மகன்களின் பெயர் இதுதான் - ரசிகர்கள் ஆச்சர்யம்!
நயன்தாரா தனது மகன்களின் பெயரை நிகழ்ச்சி மேடையில் அறிவித்துள்ளார்.
விக்கி-நயன்
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் கடந்த ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே கலந்து கொண்டது.
தொடர்ந்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். என திடீரென தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து இருவரும் பல சர்ச்சைகளுக்கு ஆளாகினர்.
இரட்டை குழந்தைகள்
வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டது தெரியவந்தது. இப்படி தொடர்ந்து இந்த ஜோடி ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா,
முதல் முறையாக தன்னுடைய இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்துள்ளார். அதன்படி ஒரு மகனுக்கு 'உயிர் ருத்ரேனில் என் சிவன்' என்றும் மற்றொரு பிள்ளைக்கு 'உலக தெய்வேக் என் சிவன்' என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.