Tuesday, Mar 11, 2025

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் ஏன் இடம் பெறவில்லை? - விளக்கம் கொடுத்த சிவி சண்முகம்

ADMK
By Irumporai 2 years ago
Report

பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து சி.வி. சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் போட்டியிடுவதாக வேட்பாளரை அறிவித்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்த விவகாரத்தில் பழனிச்சாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது .

சிவி. சண்முகம் விளக்கம்

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் கடிதத்தினை தேர்தல் ஆணையத்திடம் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து தேர்தல் ஆணையத்திடம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் படிவம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார் சி.வி. சண்முகம். இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2646 பேருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் ஏன் இடம் பெறவில்லை? - விளக்கம் கொடுத்த சிவி சண்முகம் | Name Of The Ops Candidate Not Included Cv Face

தென்னரசுவிற்கு பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 92 சதவிகிதம் பேர் அதாவது 2051 வாக்குகள் தென்னரசுவிற்கு ஆதரவாக கிடைத்திருக்கிறது. பொதுக்குழுவில் பெயரை கொடுக்காததால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறியிருக்கிறார்.   

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பின் வேட்பாளர் செந்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.