அனைத்து பாரதிய அதிமுக என பெயர் மாற்றப்படுமா..? கேள்வியால் ஷாக்கான செல்லூர் ராஜு

ADMK Chennai India Sellur K. Raju
By Karthick Sep 10, 2023 08:32 AM GMT
Report

இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றப்படவுள்ளதாக சில தினங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

பாரத் விவகாரம்

ஜி 20 மாநாடு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என அச்சிடப்படாமல், பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி நிலையில், இந்தியா என்ற பெயர் மாற்றப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்தன.

name-change-of-india-sellur-raju-responds

அதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவினர் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியின் மேஜையில் பாரத் என்ற பெயரே இடம்பெற்றிருந்தது. இது மேலும், இந்த கூற்றுகளை வலுப்பெற செய்துள்ளது.இந்நிலையில் தான் இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது

செல்லூர் ராஜு பதில்

.இன்று சென்னையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

name-change-of-india-sellur-raju-responds

அப்போது இந்தியா என்ற பெயர் பாரத்'தாக மாறினால், கட்சியின் பெயர் அனைத்து பாரதிய அதிமுக என மாற்றப்படுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக்கொண்டு பதிலளித்த செல்லூர் ராஜு, தனக்கு இந்தியா அல்லது பாரத் இரண்டுமே ஒன்று தான் என்றும் இது ஒரு புது கான்செப்ட் என குறிப்பிட்டு வரும் போது பாத்துக்கலாம் என கூறி சென்றார்.