பாஜகவில் இணைந்தார் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம்

president election tamilnadu
By Jon Jan 29, 2021 04:49 PM GMT
Report

புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி குழப்பம் நீடித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இருவரும் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியும் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

இருவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் சிவகொழுந்துவைச் சந்தித்து அளித்தனர். அவர்களின் ராஜிநாமா கடிதத்தை சட்டப் பேரவைத் தலைவரும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் தில்லியில் இன்று பாஜகவில் இணைந்தனர்.

இன்று (ஜன.28) காலை தில்லிக்கு புறப்பட்ட அவர்கள் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.