தப்பியோடும் நமல் ராஜபக்சவின் மனைவி - வைரலாகும் வீடியோ
இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் காட்டி வருகின்றனர்.
இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் அரசு பதவிகளில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விலகியுள்ளார்.
இதற்கிடையில் போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.
இலங்கையில் உள்ள படை முகாமில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Namal Rajapaksha and his family members leave COLOMBO by helicopter from Police Park .
— Suresh Kumar (@journsuresh) May 10, 2022
#SriLanka #SriLankaCrisis #SriLankaprotest #SriLankaEconomicCrisis #Rajapaksas #NAMALRAJAPAKSA pic.twitter.com/2Mu5v9GNlv