முட்டைக்கு மட்டுமா ஃபேமஸ்? மலைகளின் மாநகரான நாமக்கல்லின் வரலாறு!
பாலடைந்த கோவிலின் வடமேற்கு மற்றும் தெற்கு சுவறுகளில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் நாமக்கல் பகுதி ‘திருவரைக்கல்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாட்டின் பெறும்பாலான பகுதிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகள் நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதாலும், நாமக்கல் ‘ கோழிகள் நகரம்’ என்றும், ‘முட்டை நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. தகடூர் அதியமான்களின் ஆட்சிப் பகுதியிலும் பின்னர் கொங்கு சோழர், கங்கர், நாயக்கர், திப்புசுல்தான் முதலியோரின் ஆளுகையின் கீழ் இருந்தது.
நாமகிரி என்று அழைக்கப்படும் 65 மீட்டர் உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மலைக்கோட்டை
இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். நகரின் மையப் பகுதியில் 246 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது மலைக்கோட்டை. மலையைக் குடைந்து கட்டப்பட்ட குடவறை கோவில்களான இவை, கிபி 784ம் ஆண்டு அதியமான் மரபை சேர்ந்த குணசீலன் என்பவர் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இந்த மலை மீது இருக்கும் கோட்டை, 400 ஆண்டுகள் பழைமையானது. மலைக்குன்றில் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கொண்டே இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டில், சேந்தமங்கலம் பாளையக்காரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது எனக் கருதப்படுகிறது. 1997 முதல் நாமக்கல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
சிறப்புகள்
எந்த மாவட்டத்தில் இருந்து இந்த மாவட்டத்துக்கு நுழைந்தாலும் ஒரு மலையைத் தொட்டுதான் நுழைய முடியும் என்கிற அளவுக்கு மலைகளும், மலைக் குன்றுகளும் நிறைந்ததாக உள்ளது. மலைக்கோட்டை, கொல்லி மலை, அர்த்தநாரீஸ்வரர் மலை, நைனா மலை, தலை மலை, சித்தர் மலை, போத மலை, சிவன் மலை என சொல்லிக்கொண்டே போகலாம்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை; வெள்ளையரை எதிர்த்து மடிந்த மாவீரன் தீரன் சின்னமலை; மோகனுர் கவிஞர் கி.வா.ஜ என இவர்களெல்லாம் இங்கு பிறந்து தமிழகமெங்கும் மனம் வீசியவர்கள். நாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நன்செய் விவசாயம் சிறிதளவும், புன்செய் விவசாயம் பெருமளவிலும் நடைபெறுகிறது.
உற்பத்தி
சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள், கரும்பு, நெல், வாழை, வெற்றிலை, பாக்கு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டைப்பயிறு, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல் கிடைக்கின்றது. இரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு இது பயன்படுகிறது.
மோகனுரில் சர்க்கரைத் தொழிற்சாலை நடைபெற்று வருகிறது. பள்ளிபாளையத்தில் பெரிய காகிதத் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பெரிய நூற்பு ஆலைகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் கோழி வளர்ப்பு, மற்றும் முட்டை உற்பத்தியில் தென்னிந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது.
ஆன்மீகம்
நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் முட்டைகள் வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கேரள மாநிலத்தின் முட்டை விற்பனை நாமக்கல்லை நம்பித்தான் இருக்கிறது. மாவட்டம் முழுவதும் கால்நடை வளர்ப்பு தொழில் இருக்கிறது. இதன் மூலம் பால் சேகரிக்கப்பட்டு முக்கிய நகரங்களுக்கு கொண்டுவரப்பட்டு குளிர்பதன கிடங்கில் வெண்ணெய் எடுக்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட பல ஆறுகள் உள்ளன. அழகிய மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது. இது உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில், நாமக்கல் நரசிம்மர் கோவில் உட்பட பல முக்கிய கோவில்கள் உள்ளன.
சுற்றுலா
கொல்லிமலை, காவேரி ஆறு மற்றும் வேட்டக்குடி பறவைகள் சரணாலயம் உட்பட பல இயற்கை இடங்கள் உள்ளன. செழுமையான கலாச்சார பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மையுடன், நாமக்கல் மாவட்டத்திற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.