நாமக்கல் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
நாமக்கல் மாவட்டம்
1997 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் இருந்து, நாமக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. ஈரோடு, கரூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ளது.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம், பரமத்தி-வேலூர் என 6 சட்டமன்ற தொகுதிகளும், நாமக்கல் மாநகராட்சியும் இந்த மாவட்டத்தில் உள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்ட மக்கள்தொகை 17.26 லட்சமாக உள்ளது. இங்கு கோழிப்பண்ணை, லாரி பாடி கட்டுவது முக்கிய தொழிலாக உள்ளது.
ஸ்ரேயா பி சிங் ஐ.ஏ.எஸ்
கேரள மாநிலம் கண்ணூரில் பிறந்த பொறியியல் பட்டதாரியான இவர், 2012 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் பதவியில் சேர்ந்தார். ஆனாலும் ஐ.ஏ.எஸ் பதவிதான் தனது லட்சியம் என்பதால் விடாமுயற்சியுடன் 2013 ஆம் ஆண்டு தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் பதவியை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியர், திருநெல்வேலி ஆணையர் (விளக்கம், நடவடிக்கைகள்), திருநெல்வேலி கூடுதல் ஆட்சியர், பத்மநாதபுரம் சார் ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் என பல்வேறு பதவிகளை வகித்து வந்த இவர் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
உமா ஐ.ஏ.எஸ்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர், எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி படித்து விட்டு, 1995 ஆம் ஆண்டு திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு 2005 ஆம் ஆண்டில், திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், 2015 ஆம் ஆண்டில் தேசிய நலவாரிய குழும இணை இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு ஐ.ஏ.எஸ் கேடருக்குப் பதவி உயர்வு அளித்தது. மாநிலத் தேர்வின் கீழ் சிவில் சர்வீசிற்கு பதவி உயர்வு பெற்ற தமிழகத்தின் முதல் டாக்டர் என்ற பெருமை டாக்டர் உமா ஐ.ஏ.எஸ் -க்கு உள்ளது. அதன் பிறகு திருவள்ளூரில் பயிற்சி ஆட்சியர், பழனியில் சார் ஆட்சியராகவும், ராணிப்பேட்டையில் துணை ஆட்சியர் என பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்துள்ளார்.
அதன் பிறகு சுகாதாரத் துறை திட்ட இயக்குநராகவும், முதல்வர் காப்பீடு திட்டம், ஆம்புலன்ஸ் சேவை திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். கொரோனா பெருந்தொற்றின் போது மாநில அளவில், சென்னையில் வார் ரூமில் படுக்கை மேலாண்மைக்கான கண்காணிப்பு அதிகாரியாக டாக்டர் உமா ஐ.ஏ.எஸ் பணியாற்றினார். இவரது தலைமையின் கீழ் சிஎம்சிஎச்எஸ் திட்டத்தில், தமிழக அரசின் பங்கு முதல் முறையாக 48 சதவீதமாக ஆக உயர்ந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். அலுவலகத்தில் மட்டும் இருந்து பணி செய்யாமல் காலை முதல் மாலை வரை கள ஆய்வு செய்து மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார் என முதல்வர் மு.க.ஸ்டாலிமு.க.ஸ்டாலினால் பாராட்டு பெற்றவர். பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு முக்கிய பகுதிகளில் அவ்வப்போது ஆய்வில் ஈடுபட்டு வருவார்.