Monday, Apr 7, 2025

விபத்தில் அடிப்பட்ட நண்பனின் உயிரை காப்பாற்ற ஓலமிட்டு கதறிய சக நாய்கள்... - நாமக்கல்லில் நெகிழ்ச்சி சம்பவம்

Tamil nadu
By Nandhini 2 years ago
Report

விபத்தில் அடிப்பட்ட ஒரு நாயின் உயிரை காப்பாற்றக்கோரி ஓலமிட்டு கதறிய சக நாய்களின் வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓலமிட்டு கதறிய சக நாய்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நாமக்கல் மாவட்டத்தில் சாலையில் இரு சக்கரவாகனத்தில் தலையில் அடிபட்ட நாய் ஒன்று உயிருக்கு துடிதுடித்தது. இதைப் பார்த்த நாய் கூட்டம் ஓடி வந்து உயிருக்கு போராடிய நாயை தன் கால்களால் தட்டி எழுப்பியது.

இதனையடுத்து நாய்கள் கூட்டம் ஒன்றாக இணைந்து ஓலமிட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்த மக்களுக்கு இதைப் பார்த்ததும் வியப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இளைஞர்கள் சிலர் அந்த நாயை மீட்டு சாலையோரத்தில் கிடத்தி சிகிச்சை கொடுத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

நாய் உயிரை காப்பாற்ற மற்ற நாய்கள் சேர்ந்து ஒன்றாக ஓலமிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சி அடைந்து துக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

namakkal-accident-dog-death