சவால் விடுத்த அண்ணாமலை - செஞ்சு காட்டிய சீமான்!

Naam tamilar kachchi Tamil nadu K. Annamalai Seeman Lok Sabha Election 2024
By Sumathi Jun 04, 2024 08:52 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி சில தொகுதிகளில் 3வது இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது.

அண்ணாமலை சவால்

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

annamalai - seeman

இதில் திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணிகளோடும், நாம் தமிழர் கட்சி தனித்தும் பேட்டியிட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில், திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

2026-ல் தவெகவுடன் கூட்டணியா? விஜய் பாணியிலேயே அதிரடி பதிலளித்த சீமான்!

2026-ல் தவெகவுடன் கூட்டணியா? விஜய் பாணியிலேயே அதிரடி பதிலளித்த சீமான்!

நாதக முன்னிலை

தர்மபுரி தொகுதியில் பாமகவின் சௌமியா அன்புமணியும், விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் விஜய பிரபாகரனும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

சவால் விடுத்த அண்ணாமலை - செஞ்சு காட்டிய சீமான்! | Nam Tamilar Party Is 3Rd In Some Constituencies

நாம் தமிழர் கட்சியினர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு ,நாகப்பட்டினம் ,திருச்சி, மற்றும் புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் 3வது இடத்த்இல் நீடித்து வருகின்றன.

இதற்கிடையில், பாஜகவை விட நாம் தமிழர் கட்சி கூடுதல் ஓட்டுகளை வாங்கி காட்டட்டும் என்று அண்ணாமலை சவால் விடுத்திருந்தார். தற்போதைய நிலவரப்படி பாஜகவை விட 8 இடங்களில் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.