கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் நல்லகண்ணு
இந்தியாவில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக பரவி வருகிற நிலையில் தமிழகத்திலும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் ஒருபுறம் அதிகரிக்க தடுப்பூசி செலுத்தும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 96 வயதான முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணு கடந்த வாரம் லேசான அறிகுறியுடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் உடல் நல்ல முன்னேற்றம் கண்டு நோயிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
எனினும் மருத்துவர்கள் அடுத்த பத்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
நல்லகண்ணு கடந்த மாதம் கொரோனாவுக்கான முதற்கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.