இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்.
நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 101 வயதான நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வந்தனர்.
நடிகர் ரஜினிகாந்த், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் நல்லகண்ணுவின் மகள் ஆண்டாளிடம் தொலைபேசி வாயிலாக அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் 1.55 மணிக்கு நல்லகண்ணு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இவரது உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக நாளை மாலை ஒப்படைக்கப்படுகிறது.