மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு

By Fathima Feb 24, 2026 03:43 AM GMT
Report

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூத்த தலைவர் நல்லகண்ணு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக பிப்ரவரி 1ம் தேதி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு முதல் நிலைமை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு | Nallakannu Health Update

இதனையடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

மருத்துவமனையில் வீரபாண்டியன், முத்தரசன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் வருகை தந்தனர்.

இந்நிலையில் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு | Nallakannu Health Update