நல்லகண்ணு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி! நடந்தது என்ன?
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் இன்னும் அதிகமாகிறது. இதனால் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகின்றன.
பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. அரசியல் பிரபலங்களுக்கும் வேட்பாளர்களுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவரின் நுரையீரலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.