இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

By Irumporai Jan 27, 2023 07:27 AM GMT
Report

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லக்கண்ணு அனுமதி  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு 97 வயதாகிறது. இவர் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி | Nallakannu Admitted Hospital

மருத்துவமனையில் அனுமதி 

 இதனையடுத்து மருத்துவர்கள் நல்லகண்ணுவைப் பரிசோதித்து பார்த்தனர். அதில் அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நல்லக்கண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நல்லக்கண்ணுவிற்கு காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது