31 ஆண்டுகள் சிறைவாசம் - விடுதலையானார் நளினி!

Rajiv Gandhi Tamil nadu Supreme Court of India
By Sumathi Nov 12, 2022 12:03 PM GMT
Report

31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நளினி விடுதலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நளினிக்கு முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அதன்பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

31 ஆண்டுகள் சிறைவாசம் - விடுதலையானார் நளினி! | Nalini Was Released From Jail After 31 Years

31 ஆண்டுகளாக கைதியாக இருந்தார். மேலும், வேலூர் சிறையில் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் கைதியாக நளினி இருந்தார். உடல்நிலை, அப்பா இறப்பு, மகள் திருமணம் என ஓராண்டாக பரோலில் வெளியே உள்ளார்.

நளினி விடுதலை

காட்பாடியில், வீடு ஒன்றில் தங்கியிருந்தார். தொடர்ந்து அங்குள்ள காவல்நிலையத்திலும் கையெழுத்திட்டு வந்தார். அதனையடுத்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில்,

அவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், பரோலில் உள்ள நளினி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து கையெழுத்திட்டார்.

பின், வேலூர் சிறைக்கு சென்றநளினி அங்கு விடுதலை செய்வதற்கான ஆணையை பெற்றார். மாலை 5 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டார் நளினி.