சிறையில் நான் பல முறை அழுதுள்ளேன் : மனம் திறந்த நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, 32 ஆண்டுகாலம் சிறையில் இருந்து, பல சட்டபோராட்டத்திற்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் பிரபல தொலைகாட்சிக்கு நளினி பேட்டியளித்துள்ளார்.
சிறையில் பல அனுபவங்கள்
அதில், தனக்கு சிறையில் பல மறக்க முடியாத அனுபவங்கள் இருந்துள்ளன, மனித சமுதாயத்தின் கழிவான இடம் சிறைச்சாலை என்று கூறினார். ஆகவே முடிந்தவரை என்னை அந்த இடத்தை ஒதுக்கிவைத்துக்கொண்டு, அந்த இடத்தையும் சிறப்பாக நான் உபயோகித்ததாகவே நினைப்பதாக கூறினார்.

மேலும், நான் தவறு செய்யவில்லை என்பதாலும், என்னுடைய மனசாட்சி சுத்தமாக இருந்ததாலும் நான் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து நான் விடுதலை செய்யப்படுவேன் என மிகவும் நம்பிக்கையுடன் தான் இருந்ததாக கூறினார்.
நான் நிறைய அழுதுள்ளேன்
சிறையில் பல பேர், நீ கடைசி வரை இங்கேயே தான் இருக்க போகிறீர்கள் என சொல்லுவார்கள். அங்கே எல்லாரும் ஒரு எதிர்மறை சிந்தனையோடு தான் இருந்தார்கள். எனது சூப்பிரடெண்ட் கூட நான் சிறையிலேயே இருப்பேன் என கூறும்போது நான் அழுதுவிடுவேன்.

மேலும் என்னை மட்டும் ஏன் இப்படி கூறுகிறீர்கள் என கேட்ட போது, நீ வாழ்நாள் சிறைவாசி. இங்கேயே தான் இருக்கப்போகிறாய் என கூறும்போது. எல்லாரும் தான் வாழ்நாள் சிறைவாசி. அனைவரும் சிறையிலேயே இருந்துவிட்டால் சிறை இந்நேரம் நிரம்பி வழிந்திருக்குமே.
நம்பிக்கை மட்டும் தான் இருந்தது
நான் நிச்சயம் ஒரு நாள் வெளியே போவேன் என கூறினார். நளினியும் அவரது கணவர் முருகனும் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களால் இரண்டு வார்த்தை கூட நேரில் பேசிக் கொள்ள முடியவில்லை.

முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களைத் திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்க போலீசார் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து சென்று வசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.