30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கு நளினி கடிதம்...!

nalini rajivgandhi case wrote letter to cm
By Anupriyamkumaresan May 26, 2021 12:47 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தாயாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், மாமனாருக்கான சடங்குகள் செய்யவும் தனக்கும், தனது கணவருக்கும் 30 நாள் பரோல் கேட்டு சிறை மூலம் முதல்வருக்கு நளினி கடிதம் எழுதியுள்ளார். ன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 29- ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி 30 நாள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும் சிறை துறை மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சென்னையில் உள்ள தனது தாய் பத்மா 81 வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக்கொள்ளவும்,இலங்கையில் உள்ள தனது மாமனார் வெற்றிவேல் இறந்து ஓராண்டு ஆனதால் அவருக்கு சடங்குகள் செய்யவும் தனக்கும், மத்திய சிறையில் உள்ள தனது கணவர் முருகனுக்கும் 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என நளினி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வருக்கு நளினி கடிதம்...! | Nalini Rajivgandhi Case Stalin Request