நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு..!

Nalini Paroleextension TamilnaduGovernment
By Thahir Mar 25, 2022 07:08 PM GMT
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையிலும்,அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபதித்து வருகின்றனர்.

இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நளினி அம்மா பத்மா தனது உடல்நிலை மோசமாக உள்ளதால் தன்னை கவனித்து கொள்ள தன் மகள் அருகில் இருக்க பரோல் வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நளினிக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து நளினி பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில் நளினிக்கு வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் மேலும் 30 நாள்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுட்டுள்ளது.

கடந்தாண்டு டிச.27ஆம் தேதி பரோலில் வெளியே வந்த நிலையில் நளினியின் பரோல் 3ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.