நளினிக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

Government of Tamil Nadu
By Thahir May 26, 2022 07:34 PM GMT
Report

நளினிக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது தமிழக அரசு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலுார் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினிக்கு பரோல் வழங்க கோரி அவரது தாயார் பத்மா கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நளினிக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு | Nalini Gets Another 1 Month Extension Of Parole

அவரின் கோரிக்கையை ஏற்று நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 27-ந் தேதி நளினி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

தனக்கு வழங்கப்பட்ட பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு அளித்தார்.அவரின் மனுவை சிறை நிர்வாகம் அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து நளினிக்கு இதுவரை 4 முறை பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. நாளை சிறைக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு 5-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.