தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5,000 வழங்கியுள்ளார் நளினி
சிறைவாசிகள் வைப்பு நிதியில் இருந்து முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 5000 வழங்கியுள்ளார் நளினி.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா நிவாரண நிதியாக தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து 5000 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சிறை கண்காணிப்பாளர் மூலம் அனுப்பி வைத்தார்.
தனது சிறைவாசிகள் வைப்பு நிதியில் இருந்து 5000 ரூபாயை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதற்க்கான கடித்ததை நளினி சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளார்.
சிறை கண்காணிப்பாளர் நளினியின் கடிதத்தை ஏற்று அவரது வைப்பு தொகை கணக்கில் இருந்து 5000 ரூபாயை முதர்வர் நிவாரணத்திற்க்கு அனுப்பினர்.