பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற 10 வகுப்பு மாணவர்கள்

India Telangana Crime
By Fathima Aug 20, 2026 09:45 AM GMT
Report

Nalgonda school principal murder case 2 student arrested: தெலுங்கானாவில் பணத்திற்காக பள்ளி முதல்வரை கத்தியால் குத்தி கொலை செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி முதல்வர் குத்தி கொலை

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தின் கொடமள்ளேபள்ளி பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா பப்ளிக் பள்ளியின் முதல்வர் கள்ளூ ரூபா ரெட்டி.

கடந்த ஆகஸ்ட் 12ம் திகதி ரூபா ரெட்டி அவரது இல்லத்தில் 27 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.

முன்னதாக ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர் ரூபா ரெட்டியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது பதில் கிடைக்கவில்லை என்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டுள்ளார்.

பள்ளி முதல்வரை குத்திக் கொன்ற 10 வகுப்பு மாணவர்கள் | Nalgonda School Murder Case 2 Student Arrested

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டிற்கு வந்த பார்த்த ரூபா ரெட்டி உயிரிழந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மாணவர்கள்

ரூபா ரெட்டி அவரது அத்தையுடன் கடைசியாக பேசிக் கொண்டிருந்த போது பாபு என்ற பெயரை உச்சரித்துள்ளார்.

இதனை முதன்மையாக கொண்டு விசாரணையை தீவிரப்படுத்திய பொலிஸார் ரூபா ரெட்டி பணியாற்றி வந்த பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் ரூபா ரெட்டியின் வீட்டுக்குள் நுழைந்து 2.50 லட்சத்தை திருடி விட்டு தப்பிக்க முயன்ற போது ரூபா ரெட்டி அவர்களை அடையாளம் கண்டு கொண்டதால் அந்த மாணவர் ரூபா ரெட்டியை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.