2000க்கும் அதிகமான ஆபாச வீடியோ; பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசி - ஆயுள் முழுவதும் சிறை
பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்த நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் காசி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி (26). பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளம்பெண்களிடம் பேசி தனது காதல் வலையில் விழ வைத்துள்ளார். அதன்பின் அவர்களை வரவழைத்து தனிமையில் இருந்துள்ளார்.
மேலும், அதனை வீடியோவாக எடுத்து அவ்வப்போது மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். அதற்கு மறுத்த பெண்களிடம் வீடியோவை காட்டி பணம் பறித்துள்ளார். இதற்கிடையில், இவரால் பாதிக்கப்பட்ட பெண்போலீஸில் புகாரளித்தார்.
ஆயுள் தண்டனை
அதனைத் தொடர்ந்து 2020ல் கைது செய்யப்பட்டார். விசாரணையில், 2000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை போலீஸார் கைப்பற்றினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்த போது கைவிலங்குடன் இருந்த காசி, ஹார்ட்டின் ஷேப்பில் கை வைத்து போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இவரது கைவரிசை முடிவுக்கு வராததை தொடர்ந்து 4 முறை ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் காசிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.