கொங்குநாடு மக்களின் எதிர்பார்ப்பு என்றால் அரசு செய்யலாம்: நயினார் நாகேந்திரன்

Dmk Bjp Nainar nagendran Kongunadu
By Petchi Avudaiappan Jul 11, 2021 11:38 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

 கொங்குநாடு என்பது தமிழ்நாட்டில் தான் உள்ளது என நெல்லை சட்டமன்ற பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது முழு திருஉருவச் சிலைக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் இடம் கொங்குநாடு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஆந்திரா இரண்டாக பிரிந்து இருக்கிறது. உத்தரபிரதேசம் இரண்டாக பிரிந்து இருக்கிறது.

மாநிலங்கள் இரண்டாக பிரிப்பது மாநில மக்களின் எதிர்பார்ப்பையும் நோக்கத்தையும் உணர்த்துகின்றது. மாநில மக்களுடைய எதிர்பார்ப்பு அவ்வாறாக இருக்கும் என்றால் அதை செய்ய வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.

மேலும் ஏற்கெனவே மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களுக்கு எல்லாமே குறுகிய கண்ணோட்டத்தோடு போய்க் கொண்டிருக்கும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.