ரூ.100 கோடி நில மோசடி புகார் - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் பத்திரப்பதிவு ரத்து!

Tamil nadu BJP
By Jiyath Jul 20, 2023 08:13 AM GMT
Report

மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நில மோசடி

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நயினார் நாகேந்திரன். இவரது மகன் நயினார் பாலாஜி பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக பொறுப்பில் உள்ளார்.

ரூ.100 கோடி நில மோசடி புகார் - பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் பத்திரப்பதிவு ரத்து! | Nainar Nagendran Son Bal 100 Crore Land Ibc 09

இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சுமார் 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இந்த நிலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டது. இதில் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து நிலத்தின் பத்திரப்பதிவை ரத்து செய்து நெல்லை மண்டல துணை பத்திரப்பதிவு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நயினார் பாலாஜி மீதான மோசடி புகாரை 15 நாட்களில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அமைச்சர் மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.