விஜய்- த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து: பதிலளித்த நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran
By Fathima Feb 16, 2026 06:54 AM GMT
Report

தவெக தலைவர் விஜய்- த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, த்ரிஷா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படும்படி பேச மாட்டேன், விஜய் பங்கேற்கும் கூட்டங்களில் உயிரிழப்பு ஏற்படுவது நல்ல சகுணம் தான் என தெரிவித்துள்ளார்.

விஜய்- த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: வானதி சீனிவாசன் என்ன கூறினார்?

விஜய்- த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: வானதி சீனிவாசன் என்ன கூறினார்?


மேலும், திமுக கூட்டணி சரியான வடிவம் பெற்றுள்ளதா என்பது சந்தேகம், தேர்தல் அறிக்கையை கூட முழுமையாக நிறைவேற்ற முடியாத கட்சி, காங்கிரஸ் திமுக அமைச்சர்கள் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறதா என்பதே தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக விஜய் பற்றி பேசுகையில், முதலில் விஜய் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். த்ரிஷாவை விட்டு வரவேண்டும் என பேசியிருந்தார்.

இக்கருத்துக்கு திமுக, காங்கிரஸ், அதிமுக-வில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்- த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து: பதிலளித்த நயினார் நாகேந்திரன் | Nainar Nagendran Reply To Vijay Trisha Issue