ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்!
பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் விலகல்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை அடுத்தடுத்து மூன்று முறை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,
நயினார் ஆதங்கம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார்.
ஓபிஎஸ் வெளியேறியது சொந்தப் பிரச்சனையா அல்லது வேறு காரணமா என தெரியவில்லை. கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். அவர் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன்.
தொகுதிப் பிரச்னைக்காக ஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சரை சந்தித்திருக்கலாம். ஒரு எம்.எல்.ஏ ஆக நானே முதலமைச்சரை சந்திக்க முடியும். ஓபிஎஸ் கேட்டுக்கொண்டால் வரும் 26ம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் என தெரிவித்துள்ளார்.