பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்

bjp candidate nagendran
By Jon Mar 12, 2021 04:38 PM GMT
Report

பாஜகவிலிருந்து வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகாத நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, இன்று நல்ல நாள் என்பதால் இன்றே வேட்புமனு தாக்கல் செய்ததாகவும், வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.