அண்ணாமலைக்கும், எனக்கும் சண்டை மூட்டுறீங்க.. நயினார் நாகேந்திரன் வேதனை
டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்தது நட்பு ரீதியிலானது என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
டிடிவி-அண்ணாமலை சந்திப்பு
நடிகை ராதிகாவின் தாயார் கீதா உடல் நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை ராதிகா மற்றும் சரத்குமாரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகவேள் என்றால் எம்.ஆர்.ராதா தான்..கீதா ராதா மறைவையொட்டி இன்று நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளேன். சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் திரையுலகில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர்.
நயினார் விளக்கம்
நட்பு ரீதியாகவே அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவியை அண்ணாமலை சந்தித்துள்ளார். வருகிற 6-ந் தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார். முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியின் கூட்டணிக்கு எதிராக வெளியே சென்ற கட்சியினரை சந்தித்து விமர்சனம் செய்கிறாரே,
நீங்கள் தலைவரா அல்லது அண்ணாமலை தலைவரா என்ற விமர்சனம் வருகிறதே என்ற கேள்விக்கு, இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமென்பதல்ல, நீங்கள் கேட்கும் கேள்வி சரியல்ல. எங்களுக்குள் சண்டை மூட்டுவது போல உள்ளது.
இது மாதிரி கேள்வி வேண்டாம் எனக் கூறினார். கூட்டணி குறித்து விமர்சிக்கிறவர்களை நேரில் சென்று சந்திக்கின்றாரே என்ற கேள்விக்கு, அவர் சொல்லும் போது நட்பு ரீதியாக சந்திப்பதாக சொல்லி இருக்கின்றார். எனக்கும் எல்லா கட்சியிலும் நட்பு ரீதியாக ஆள் இருக்கிறார்கள், என பதிலளித்தார்.