தனிக்கட்சி தொடங்கும் அண்ணாமலை? நயினார் நாகேந்திரன் தகவல்
அண்ணாமலை நிச்சயமாக தனிக்கட்சி தொடங்க மாட்டார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தனிக்கட்சி
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை ஆதீனத்தை சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜக காரணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் வெறும் கண்துடைப்பு தான். தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது.
நயினார் பேட்டி
துரியோதனனிடம் சென்றது போல, சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு தோல்வி தான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியமைக்கும். டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார்.

இனிமேல் அவரை மீண்டும் எப்படி அழைக்க முடியும்? அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி துவங்க மாட்டார்.என்ன பிரச்சனை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தலை சந்திப்போம். அதில் உறுதியாக இருக்கிறோம்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தை தூண்ட கூடிய கதாநாயகனே சு.வெங்கடேசன் தான். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா?திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை" என தெரிவித்துள்ளார்.