36 வருஷமா வயிற்றில் இரட்டை சிசுவை சுமந்த 60 வயது முதியவர் - ஆடிப்போன மருத்துவர்கள்

Maharashtra
By Sumathi Jun 24, 2023 05:39 AM GMT
Report

முதியவர் தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து வந்தது தெரியவந்துள்ளது.

கருவில் கரு

மகாராஷ்டிரா, நாக்பூரைச் சேர்ந்தவர் சஞ்சு பகத். இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டுள்ளது. 20 வயதாகும் வரை அவர் தனது வயிறு குறித்து பெரிதாக கவலைக்கொள்ளவில்லை. அதே பகுதியில் பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

36 வருஷமா வயிற்றில் இரட்டை சிசுவை சுமந்த 60 வயது முதியவர் - ஆடிப்போன மருத்துவர்கள் | Nagpur Man Carried Twin Inside His Stomach

தொடர்ந்து, நாட்கள் செல்ல செல்ல அவரது வயிறு மேலும் பெரிதாகி பலூன் போல காணப்பட்டது. வயிறு வீக்கம் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. அதனால், 1999ல் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரியநோய்

அப்போது பரிசோதித்ததில் அவரது வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.

ஆனால் அது இறந்துள்ளது. இது மறைந்து போகும் இரட்டை நோய்க்குறி எனக் கருதியுள்ளனர். மேலும், அரிய நோய் பாதிப்பான 'கருவில் கரு' என்று கண்டறியப்பட்டது. பின்னர் அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.