ஒவ்வொரு வருடமும் நாகூர் ஆண்டவரை காண வரும் ஏ.ஆர்.ரகுமான் - கந்துாரி விழா கோலகலம்

Tamil Cinema A R Rahman Festival Nagapattinam
By Thahir Jan 03, 2023 08:57 AM GMT
Report

உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா சந்தன கூடு ஊர்வலத்தை அடுத்து இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆட்டோவில் வந்து இறங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நாகூர் தர்கா சந்தன கூடு ஊர்வலம் 

உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில் 466ம் ஆண்டு கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது .

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ம் முதல் தேதி கொடியேற்றதுடன் தொடர்வது வழக்கம்.

Nagor Dargah Sandalwood Nest Procession

விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், ஆட்சியர் அருண் தம்புராஜ், மற்றும் மாவட்ட எஸ்பி ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வானது நேற்று இரவு யாஹுஸ்சைன் பள்ளிவாசலில் இருந்து துவங்கியது. இதையடுத்து நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்ற சந்தனக் கூட்டின் மீது வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மும்மதத்தினரும் பூக்களை தூவி வழிபட்டனர்.

ஆட்டோவில் வந்து இறங்கி கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான் 

இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம், தாரைதப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.

சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்ஹா வந்தடைந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Nagor Dargah Sandalwood Nest Procession

ஏராளமானோர் பங்குகொண்ட இந்நிகழ்ச்சிக்கு, கூட்ட நெரிசல் காரணமாக ஆட்டோவில் பயணித்து தர்காவை சென்றடைந்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்றார் .

இந்நிகல்ச்சியில் நகை மாவட்டம் சார்பாக 1000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .