புனித நாகூர் தர்காவில் குவிந்த மக்கள் - நாளை மறுதினம் கந்துாரி விழா

Tamil nadu
By Thahir Dec 22, 2022 03:33 AM GMT
Report

உலக புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

நாகூர் தர்கா கந்துாரி விழா

இதனையொட்டி இன்று அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

அப்போது பாய்மரத்தில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அனைத்து சமுதாய மக்களும் பாய்மரத்தில் முடிச்சு போட்டனர்.

Gandhari festival

பின்னர் பாய்மரம் ஏற்றப்பட்டது. நாகூர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கந்துாரி விழா நடைபெறுகிறது.

இதை தொடர்ந்து ஜனவரி 2ம் தேதி சந்தன கூடு ஊர்வலமும் நடைபெறும் என கூறப்படுகிறது. பின்னர் ஜனவரி 3ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

இதையடுத்து நாகூரில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.