Friday, Jun 20, 2025

48 வயசாச்சு...திருமணம் ஆகல...ஆனாலும் அந்த ஆசை இன்னமும் இருக்கு...ஓப்பனாக சொன்ன நக்மா

Nagma Tamil Actress
By Karthick 2 years ago
Report

முன்னணி நாயகியாக இருந்த 48 வயதாகும் நடிகை நக்மா தனது திருமண வாழ்வு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை நக்மா  

90-களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நக்மா. காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நக்மா தொடர்ந்து பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பிஸ்தா போன்ற பிளாக்பாஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.

nagma-about-her-marriage-desires

தமிழை கடந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி என பல மொழி படங்களில் நடித்துள்ள நக்மா பின்னர் கடைசியாக நடிகர் அஜித்தின் "சிட்டிசன்" படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.   

திருமண ஆசை 

படவாய்ப்புகள் குறைந்த நிலையில், அவர் 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீரத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போதும் காங்கிரஸ் கட்சியில் நீடித்து வரும் அவர் 48 வயதாகும் நிலையில், தற்போதும் திருமணமாகாமல் வாழ்த்து வருகின்றார்.

nagma-about-her-marriage-desires

இந்நிலையில் தான் அவர் தன்னுடைய திருமண குறித்தும், குடும்ப வாழ்க்கை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், அவர் பேசும் தற்போது தனக்கு 48 வயதாகும் நிலையில், தான் திருமண செய்யவேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை என கூறிய நக்மா, தனக்கும் திருமணம் குழந்தை என வாழவேண்டும் என ஆசை உள்ளதாக தெரிவித்துள்ளார்.    

மேலும், இனிமேலாவது அப்படி ஒரு வாழ்க்கை அமைகிறதா என்று பார்ப்போம் என குறிப்பிட்ட நக்மா, திருமண ஆகவில்லை என்றாலும் தான் இப்போதும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.