சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ் - மார்ச் 6 ஆம் தேதி ரிலீஸ்
தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நாகினி சீரியலின் 6 ஆம் பாகம் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் எந்த மொழிகளில் இருந்தாலும், மொழி மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருந்தால் நிச்சயம் வரவேற்பார்கள்.
அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு நாகினி சீரியலின் முதல் பாகம் இந்தியில் எடுக்கப்பட்டு ஒளிபரப்பானது. அங்கு பெரும் வரவேற்பை பெறவே தமிழில் டப் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பை பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி பார்க்க தொடங்கிய இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு மற்ற சீரியல்களை விடவும் அதிகம்.
பாம்பைக் கொண்டு எடுக்கப்பட்ட நாகினி சீரியல் இதுவரை 5 பாகங்களாக ஒளிபரப்பாகி முடிவு பெற்றது. இதனைத் தொடர்ந்து 6வது பாகம் எப்போது வெளியாகும் காத்திருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
வரும் மார்ச் 6 ஆம் தேதி அன்று நாக பஞ்சமி என்பதால் ஸ்பெஷல் பிரீமியர் ஷோவாக 2 மணி நேரங்கள் நாகினி சீசன் 6 ஒளிபரப்பாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்தியில் இதன் ஆறாம் பாகமானது கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஒளிபரப்பானது. இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் கொரொனாவில் இருந்து நம் நாட்டை காப்பாற்ற நாகினி பிறப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .