சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது - கதறி அழுத குடும்பம்!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று காலை அவருக்கு சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நேற்று மதியம் 1 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை, 38 சின் மிங் டிரைவில் அவருக்காக இறுதி அஞ்சலி பிராத்தனை கூட்டம் நடைபெற்றது.
அவரது நண்பர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் என 100க்கும் மேற்பட்டோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால், நாகேந்திரன் தாயார் மற்றும் உறவினர்கள் யாரும் பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், நாகேந்திரன் உடல் மலேசியாவின் ஈப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
