சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நாகேந்திரன் தூக்கிலிடப்பட்டார் - இணையத்தில் வைரலாகும் கடைசி புகைப்படம்

By Nandhini Apr 28, 2022 08:29 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு நேற்று தூக்கிலிடப்பட்டார்.

மலேஷியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் (34). இவர் 2009ம் தேதி சிங்கப்பூருக்கு 'ஹெராயின்' போதை மருந்து கடத்தி வந்ததற்காக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, நாகேந்திரன் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரிய மேல்முறையீடுகளும், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டன.

சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி நிறைவேற்றப் போவதாக தெரிவித்திருந்தது. ஆனால், இறுதி முயற்சியாக நாகேந்திரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ரவி, சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு, விசாரணைக்கு வந்தபோது, நாகேந்திரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மேல்முறையீடு விசாரணை முடியும் வரை, நாகேந்திரன் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கருணை மனு அடிப்படையில் நாகேந்திரனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி தெருவில் நின்று பலர் தங்களது கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அவருக்காக கோரப்பட்ட அனைத்து கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, இறுதியாக நாகேந்திரன் சிங்கப்பூரில் நேற்று காலை தூக்கிலிடப்பட்டார்.

தற்போது, நாகேந்திரன் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் -