நாகசைதன்யா - சமந்தா விவாகரத்து விவகாரம் : மாமனார் நாகார்ஜூனா கண்ணீருடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு
நடிகர்கள் நாக சைதன்யா, சமந்தா விவாகரத்து சம்பவம் தொடர்பாக நடிகர் நாகர்ஜுனா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சமீப காலமாகவே ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில் நேற்று இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து நாக சைதன்யாவின் தந்தையும், சமந்தாவின் மாமனாருமான நடிகர் நாகார்ஜூனா வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கனத்த இதயத்துடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன். சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் நடந்தது மிகவும் துரதிஷ்டமானது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் தனிப்பட்டவை. அதில் எங்களால் தலையிட முடியாது.
சமந்தாவும், சைதன்யாவும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். சமந்தா இந்த வீட்டில் இருந்த நாட்களை, அவர் எங்களுடன் செலவழித்த நேரங்களை நாங்கள் எப்போதும் அன்புடன் நினைவுகூர்வோம். சமந்தா எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவராகத் தான் இருப்பார். இருவருக்கும் இறைவன் மன வலிமையைத் தரட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 2, 2021