நாகார்ஜூனா குடும்பத்தில் விவாகரத்தில் முடியும் முதல் திருமணங்கள்

Nagarjuna ActressSamantha
By Petchi Avudaiappan Oct 05, 2021 11:32 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வதந்திகள்
Report

கடந்த சில நாட்களாகவே சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் இந்திய திரையுலகில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

தெலுங்குத் திரையுலகத்தில் தனித்துவமாக தனது வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வரராவ். அவர் மீதும் அவருடைய படங்கள் மீதும், அவரது குடும்பத்தின் மீதும், தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை உண்டு. அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ள பலருக்கும் அவர்களது முதல் திருமணம் வெற்றிகரமாக அமையாமல் விவாகரத்தில் முடிந்தது தான் காலத்தின் முடிவாக உள்ளது.

நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜுனா, பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமியை முதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகை அமலா மீது காதல் கொண்டதும் லட்சுமியை விவகாரத்து செய்துவிட்டார்.

நாகார்ஜுனா, லட்சுமி தம்பதியினரின் மூத்தமகன் தான் நாக சைதன்யா. இவருக்கு தற்போது சமந்தாவுடன் விவாகரத்து ஆகியுள்ளது.

நாகார்ஜுனா, அமலா தம்பதியினரின் மகன் அகில். இவருக்கும் ஷ்ரியா பூபால் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் அதை ரத்து செய்துவிட்டனர்.

இதேபோல் நாகார்ஜுனாவின் சகோதரி மகன் நடிகர் சுமந்த். இவருக்கும் நடிகை கீர்த்தி ரெட்டிக்கும் திருமணம் நடந்தது. ஆனால், இரண்டு வருடத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.

இப்படி அக்கினேனி குடும்பத்தில் உள்ளவர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது ஏதோ ஒரு வித முன்னோர்கள் இட்ட சாபமாக தோன்றுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.