சமந்தா பற்றி தவறாக பேசினாரா முன்னாள் மாமனார் நாகார்ஜூனா? - அதிர்ச்சி தகவல்
நடிகை சமந்தாவை பற்றி தான் சொன்னதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.
இதற்கிடையில் சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார். அதற்கு நாக சைதன்யா ஓகே சொன்னார் என்று மாமனார் நாகார்ஜுனா கூறியதாக தகவல் வெளியாகி கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
ஆனால் இதை மறுத்துள்ள நாகார்ஜூனா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். சோஷியல் மீடியா மற்றும் எலக்ட்ரானிக் மீடியாவில் சமந்தா, நாக சைதன்யா பற்றி நான் கூறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அது சுத்த நான்சென்ஸ். வதந்திகளை செய்தி என்று வெளியிட வேண்டாம் என மீடியா நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.