நாகசைதன்யாவுக்கு அனுஷ்காவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததா? - நாகார்ஜூனா கூறிய உண்மை தகவல்
நாக சைதன்யாவுக்கு போன் செய்து உனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயம் ஆகிவிட்டதா என நாகர்ஜுனா கேட்ட சம்பவம் குறித்த தகவல் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சமந்தா அடுத்தடுத்து புதுப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே நாகசைதன்யாவின் அப்பாவும், முன்னணி நடிகருமான நாகர்ஜுனா முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தன் மகனும், நடிகருமான நாக சைதன்யா பற்றி கூறியுள்ளார்.
அதில் சமந்தாவுடனான திருமணத்திற்கு முன், படப்பிடிப்புக்காக சுவிட்சர்லாந்துக்கு சென்றிருந்த நாக சைதன்யாவுக்கும், நடிகை அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிவிட்டதாக வதந்தி பரவியது. இதனை கேள்விப்பட்டு அதிகாலையில் நாக சைதன்யாவுக்கு போன் செய்த நாகர்ஜூனா, நேற்று இரவு உனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிவிட்டதாமே. என்னிடம் கூட சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட நாக சைதன்யாவோ நிஜமாவா என்று கூறி சிரித்ததாகவும், அனுஷ்காவுக்கும் போன் செய்து விசாரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடைசியில் தயாரிப்பாளர் ஒருவர் செய்த வேலை இது என்று அனுஷ்கா தெரிவித்ததாகவும் நாகார்ஜூனா தெரிவித்துள்ளார்.