நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 18.10.1991 அன்று தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் வங்காள விரிகுடா கடலுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (SC), வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், நாகப்பட்டினம், வேதாரணயம் என இரு நகராட்சிகளும் உள்ளது.
ஆகாஷ் ஐ.ஏ.எஸ்
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் ஐ.ஏ.எஸ் 2013 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். சென்னை ஐஐடியில் பொறியியல் படிப்பை முடித்துள்ள இவர், 22 வயதில் தனது முதல் முயற்சியிலே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
முன்னதாக தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர், திண்டுக்கல் கோட்ட சார் ஆட்சியர், சேரன்மகாதேவி சார் ஆட்சியர், பெருநகர் சென்னை மாநகராட்சியில் வட்ட துணை ஆணையர், சென்னை (வடக்கு) குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல் இயக்குநர், தென்காசி மாவட்ட ஆட்சியர், தொழிலாளர் நலத்துறையின் இணைச் செயலர், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ.எஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கடந்த 22.07.2024 அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ.எஸ்
கேரள மாநிலத்தை சேர்ந்த ஜானி டாம் வர்கீஸ் ஐ.ஏ.எஸ் 2014 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தனது 3வது முயற்சியில், சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 8வது இடம் பிடித்தார்.
ஈரோட்டில் உதவி ஆட்சியராக தனது பணியை தொடங்கிய இவர், கடலூர் மாவட்ட துணை ஆட்சியர், தமிழ்நாடு மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகிய பொறுப்புகளை வகித்து வந்தார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கடந்த 27.05.2023 அன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
கடலூர் மாவட்ட துணை ஆட்சியராக இருந்த போது, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதோடு, மாணவர்களுக்கு ஆளுமை மேம்பாடு மற்றும் வாழ்க்கைத் திறன்களை கற்பிப்பதற்கான வகுப்புகளை தொடங்கினார்.
அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ்
தமிழ்நாட்டில் சென்னையை சேர்ந்த அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ்2013 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். எம்பிபிஎஸ் படித்துள்ள இவர் தனது 2வது முயற்சியில், சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 6வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்தார்.
தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் திட்ட இயக்குநர், தேசிய சுகாதார இயக்கத்தின் பணி இயக்குநர், கடலூர் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இவர் 17.06.2021 முதல் 21.05.2023 வரை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.
பொதுமக்களிடம் பொறுமையாக குறைகளை கேட்டறியும் இவரை பொதுமக்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இவர் நாகப்பட்டினம்மாவட்டத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது, எங்க மாவட்டத்தை விட்டு போகாதீங்க, இங்கேயே இருங்க கலெக்டர் சார் என கிராம மக்கள் பலரும் கண்ணீருடன் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக பணியாற்றிய சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ் 25.04.1998 முதல் 10.06.2001 வரை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.