நாகாலந்து துப்பாக்கி சூடு: ‘இந்த சம்பவம் தெரியாம நடந்திருச்சு’ - நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்ட அமித் ஷா

amit shah nagaland shoot out indian army civilians dead
By Thahir Dec 06, 2021 11:31 AM GMT
Report

மியான்மர் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள நாகலாந்தில் நேற்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லகப்பட்ட சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருத்தம் தெரிவித்தார்.

இந்திய வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமான மாநிலம் நாகலாந்து. அந்த மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது, டிரு-ஓடிங் என்ற சாலையில் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் என்று நினைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

இதில் 13 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,

வாகனத்தில் வந்தவர்களை தவறாக கணித்து பாதுகாப்பு படையினர்  துப்பாக்கி சூடு நடத்தினர், வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளானர், இருவர் காயங்களுடன் சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்களும் தவறாக புரிந்துக்கொண்டு ராணுவ வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். ராணுவம் தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி சூடு நடத்தியதில் மேலும் 6 பேர் இறந்துள்ளனர்.

மக்கள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீர்ர் உயிரிழந்துள்ளார், மேலும் பல வீரர்கள் காயமடைந்துள்ளனர் என வருத்தம் தெரிவித்தார்.