நாகாலாந்து அரசியல் : ஆட்சியைத் தக்கவைக்குமா பாஜக கூட்டணி ..மீண்டு எழுமா காங்கிரஸ் ?

Indian National Congress BJP Nagaland
By Irumporai Feb 24, 2023 07:58 AM GMT
Report

நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர்.

இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. தவிர, அவர்களின் தோற்றமானது இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும், கி.பி. 1228ஆம் ஆண்டில் அகோமின் வருகைக்கு முன்பாக இன்றைய நாகா மக்கள் குடியேறியதாக வரலாற்று பதிவுகளும் காட்டுகின்றன. 

நாகலாந்து தேர்தல் களம் 

வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்கிறது. திரிபுராவில் இன்று (பிப்ரவரி 16) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன.

நாகாலாந்து அரசியல் : ஆட்சியைத் தக்கவைக்குமா பாஜக கூட்டணி ..மீண்டு எழுமா காங்கிரஸ் ? | Nagaland Politics In Tamil

இதில் நாகாலாந்தைப் பொறுத்தவரையில், தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (என்.டி.பி.பி.) தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் கடந்தமுறை நாகா மக்கள் முன்னணி 26 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக திகழ்ந்தது.

ஆனால் என்.டி.பி.பி. 18 இடங்களிலும், பா.ஜ.க 12 இடங்களிலும் என 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த தேசியவாத ஜனநாயக முன்னணி, சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

நாகாலாந்து அரசியல் : ஆட்சியைத் தக்கவைக்குமா பாஜக கூட்டணி ..மீண்டு எழுமா காங்கிரஸ் ? | Nagaland Politics In Tamil

அதற்குப் பிறகு நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ-க்கள் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு கூண்டோடு தாவியதால், எதிர்க்கட்சியே இல்லாத ஓர் ஆட்சியே அங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பதால் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைமையிலான கூட்டணியே மீண்டும் வெற்றிபெறும் என்று ஆளும் அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் 15 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கும்விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்திருக்கிறது. நாகா மக்கள் முன்னணியிலிருந்து தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களில் 12 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததும் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனிநாடு கோரிக்கை

1951-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் பொதுத்தேர்தலை நாகாலாந்து மக்கள் முழுமையாகப் புறக்கணித்து, காலி வாக்குப் பெட்டிகளையே திருப்பி அனுப்பினார்கள். அந்த அளவுக்கு நாகாலாந்து தனி நாடு கோரிக்கை வலுவாக இருந்தது. அதன் பிறகு 1958-ம் ஆண்டில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை இயற்றி, நாகாலாந்தில் மூவருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் ராணுவப் படை குவிக்கப்பட்டது. தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களும் ஏராளமாக உருவாகத் தொடங்கின.

நாகாலாந்து அரசியல் : ஆட்சியைத் தக்கவைக்குமா பாஜக கூட்டணி ..மீண்டு எழுமா காங்கிரஸ் ? | Nagaland Politics In Tamil

 நாகாலாந்தின் வழக்கமான சுயாட்சி உரிமைகள் சார்ந்த விவகாரத்தில் அரசியல் தீர்வை எட்ட வேண்டுமென்பதில் இப்போதும் சில தீவிரவாத குழுக்கள் உறுதியாக இருக்கின்றன. எனவே, எந்த அரசு அமைந்தாலும் அடிப்படைச் சிக்கல்கள், நாகாலாந்தின் நீண்ட நெடிய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த சுயாட்சி உரிமைக்கான குரல்கள் எனப் பெரும் சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவற்றையெல்லாம் தாண்டி நாகாலாந்து தேர்தலில் உற்றுநோக்க வேண்டிய மற்றொரு கோணம் ஒன்று இருக்கிறது.

பெண்களுக்கு அரசியல்

அது பாலின பிரதிநிதித்துவம். இந்தியா விடுதலை அடைந்து 75-வது ஆண்டில் நிற்கிறோம் நாம். இந்த நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இருந்திக்கிறார். தற்போதைய அமைச்சரவையில்கூட பெண்கள் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். எத்தனையோ மாநிலங்களில் பெண்கள் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாகஇருக்கிறார்கள்.

ஆனால், இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் நாகாலாந்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ-கூட இருந்ததில்லை. 13 தேர்தல்களில் 20 பெண்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். அதில் குறிப்பாக 2018 தேர்தலில் மட்டும் அதிகபட்சமாக ஐந்து பெண்கள் போட்டியிட்டிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதற்காகவே நாகாலாந்தில் பெரும் வன்முறை வெடித்தது.

இருவர் கொல்லப்பட்டனர். நாகாலாந்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டுமென, அன்னையர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இருப்பினும் இந்த முறையும்கூட இதில் பெரிய மாற்றம் ஏற்படுமா என்பது சந்தேகமே. 

இயற்கை வளம் செறிந்த பகுதியாக இருப்பினும் போக்குவரத்தில் முழுமையாக இணைக்கப்படாததால், இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கூட இப்பகுதியைச் சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தராத சூழ்நிலை உள்ளது. எதிர்காலத்தில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு என்று இஷான் உதய் எனும் கல்வி உதவிக்கட்டணத் திட்டமும், இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற கல்வி நிலையங்களைச் சென்று பார்க்க வருடந்தோறும் அனுமதியும் ஏற்பாடும் செய்யும் இஷான் விகாஸ் எனும் திட்டமும் செயற்படுத்தப்படும் என்றும், தகவல் தொழில்நுட்பப் பணி, அவுட்சவுர்சிங் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் ஏற்பாடும் செய்யப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது