வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு : அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
வாக்குசாவடி மையத்தில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு நட்ந்துள்ள சம்பவம் வாக்காளர்களை பதட்டமாக்கியுள்ளது.
தேர்தல்
வடகிழக்கு மாநிலங்களான மேகலாயா மற்றும் நாகலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதே போல் தமிழ்நாடு, ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டபேரவை தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குபதிவு நடந்து வருகின்றது.
காலை 7 மணிக்கு வாக்கு பதிவு மையங்களில் வாக்குபதிவு தொடங்கிய நிலையில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஆரவத்துடன் வாக்களித்து வருகின்றனர் .

துப்பாக்கி சூடு
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மேகலாயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் சில இடங்கள் மிகவும் பதட்டமானவை எனவே துணை ராணுவபடையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வாக்குபதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் நாகாலாந்து மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன, அம்மாநிலத்தின் பந்தாரி வாக்குபதிவு மையத்தில் வன்முறை அதிகமானதால் அங்கு துப்பாகிசூடு நடத்தப்பட்டதில் தேசிய மக்கள் கட்சி ஊழியர் படுகாயமடைந்ததாக கூறப்படுகின்றது.
அதேபோல், உமாபஸ்தி என்ற பகுதியில் உள்ள அலோக்தகி வாக்குப்பதிவு மையத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குச்சாவடியில் வன்முறையும் துப்பாக்கிசூடும் நடந்துள்ளது அப்பகுதிமக்களிடையே பதட்டத்தை அதிகமாக்கியுள்ளது.