பக்கத்து வீட்டுக்காரருடன் ஓடிப்போன மனைவி - தூங்கி எழுந்த கணவன் அதிர்ச்சி!!
நாகை மாவட்டத்தில் கணவன் தூங்கி கொண்டிருந்த நேரத்தில், மனைவி பக்கத்துவீட்டுக்காரருடன் நகை, பணத்தோடு ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் அச்சக்கரையை சேர்ந்த கலைமணி பெற்றோர்கள் இன்றி தனியாக வாழ்ந்து வந்தவர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நிரோசா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
உள்ளூரில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் கலைமணி, வெளிநாடு சென்று சம்பாதித்து வருகிறார். கணவனோ பெற்றோர் இல்லாத மனைவிக்கு தகப்பனாக வாழ வேண்டும் என்று அயராது உழைத்து வருகிறார்.
ஆனால் மனைவி நிரோசாவோ, கணவனை வெளிநாடு அனுப்பி விட்டு பக்கத்துவீட்டுக்காரருடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள், நான் ஊருக்கு வருகிறேன் என கணவர் கலைமணி மனைவியிடம் கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிரோசா, கணவர் வந்துவிட்டால், பக்கத்துவீட்டுக்காரருடன் சந்தோசமாக இருக்க முடியாது என்று எண்ணி இருவரும் தனிக்குடித்தனம் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர்.
இந்த திட்டம் போதாது என்று, கணவர் கொண்டு வரும் நகை, பணத்தை சேர்த்து எடுத்து கொண்டு செல்லலாம் எனவும் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு மனைவியை சந்தித்த கணவன், ஆசையாக 3 லட்சம் ரூபாய் மற்றும் 5 பவுன் நகைகளை மனைவியிடம் கொடுத்திருக்கிறார்.
இரவு கணவன் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில், நிரோசா நகை, பணத்தோடு பக்கத்து வீட்டுக்காரருடன் ஓடிபோயுள்ளார். பாதி தூக்கத்தில் எழுந்து பார்த்த கணவன், மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார்
அளித்துள்ளார் கலைமணி.
விசாரணையில் நிரோசா பக்கத்துவீட்டுக்காரருடன் சென்றது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.