பள்ளி தலைமையாசிரியர்களே லீவு அறிவிப்புகளை வெளியிடலாம் - ஆட்சியர்
தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை?
தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆட்சியர் அறிவிப்பு
இந்நிலையில், நாகையில் மழை நீடிக்காது என்பதால் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் எனவும் கூறியுள்ளார்.